தீப்பற்றி எரிந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! ஸ்பெயினில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்
292Shares

ஸ்பெயின் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 747 விமானம் தீப்பற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவயிடத்திற்கு விரைந்த காஸ்டெல்லன் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீயை அணையத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சில காலத்திற்கு முன்பு சேவையில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் இந்த விமானம் காஸ்டெல்லன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

விமானம் பாகங்களாக பிரித்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் மூலம் ஏற்பட்ட தீப்பொறியால் விமானம் தீப்பிடித்ததாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது குறித்த விமானத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் உரிமையாளர் இல்லை எனவும், பிரித்தெடுக்கும் செயல்முறைக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்