ரஷ்யா தலைநகரை தகர்க்க ஐ.எஸ் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு!

Report Print Basu in ஏனைய நாடுகள்
470Shares

ரஷ்யா தலைநகரில் ஐ.எஸ் திட்டமிட்ட தீவிரதவாத தாக்குதல்களை முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டின் மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை தலைநகர் மாஸ்கோ பிராந்தியத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஐ.எஸ் வகுத்திருந்த சதிதிட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிக்ள கண்டுபிடித்து முறியடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பில் அதிகாரிகள் ஒருவரை தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த சதிதிட்டம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் குறித்து தகவல்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்