இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு! இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அதிகரிக்கும் விரிசல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
202Shares

தங்கள் நாட்டின மொபைல் செயலிகளுக்கு தொடர்ந்து இந்திய தடை விதித்து வருவதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரவின் கீழ் இந்திய பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2020 ஜூன் மாதத்தில் இந்திய அரசு 59 செயலிகளுக்கு தடை விதித்து அறிவித்தது.

இதைதொடர்ந்து 2020 செப்டம்பர் 2 ஆம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது 43 செயலிகளை அணுகுவதற்கு தடை விதித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடுமையாக எதிர்ப்பதாக தெற்காசியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இமாலய எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக பதற்றம் தொடர்ந்ததை அடுத்து சீனாவை குறிவைத்து இந்திய புதிய தடைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்