கண்களை பிடுங்கிவிடுவோம்... தேவையில்லாமல் தலையிடாதீர்கள்: மேற்கத்திய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
331Shares

ஹொங்ஹொங் விவகாரத்தில், மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் கண்களை நோண்டிவிடுவோம் என்று சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணியை எப்போது ஐந்து கண் கூட்டணி என்று அழைப்பர்.

அந்த வகையில், இந்த கண் கூட்டணி கொண்ட நாடுகள், ஹொங்ஹொங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்து வருகிறது என்று விமர்ச்சித்தது.

ஏனெனில், ஹொங்ஹொங்கில் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் புதிய விதிகளை சீனா அமல்படுத்தியது. இதை இந்த ஐந்து நாடுகளின் கூட்டணி கடுமையாக விமர்ச்சித்ததுடன், இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று சீனாவை வலியுறுத்தின.

ஆனால், இது தொடர்பாக பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜன். இந்த ஐந்து நாடுகளின் கூட்டணியை, அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்கள் பிடுங்கப்படும்.

சீனா எப்போதும் தொல்லை கொடுப்பதில்லை. எதைப் பார்த்தும் அஞ்சுவதும் இல்லை. அவர்களுக்கு 5 கண்கள் இருக்கிறதா அல்லது10 கண்கள் இருக்கிறதா என்பது பிரச்சனையே அல்ல என்று எச்சரித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குவதற்கு ஹொங்ஹொங் நிர்வாகத்துக்கு சீனா அதிகாரம் அளித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரைப் ஹொங்ஹொங்காங் நிர்வாகம் பதவி நீக்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

பதவி நீக்கப்பட்ட நால்வரையும் மீண்டும் பதவியமர்த்தும்படி மேற்குறிப்பிட்ட ஐந்து கண் கூட்டணி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீனாவை வலியுறுத்தினர். இந்த பதவி நீக்கம், ஹொங்ஹொங் பிராந்தியத்தின் சுதந்திரங்கள் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பான சட்டபூர்வமான கடமைகளை சீனா மீறுவதாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமையும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்