அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என பைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, பைசர் தடுப்பூசி மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறுகையில்,
அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது.
மேலும் தங்கள் மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும், தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனவும் பைசர் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.