ஐரோப்பாவில் புதிய ஊரடங்குகளை தவிர்க்க இது தான் ஒரே வழி: WHO முக்கிய அறிவுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
340Shares

முகக்கவசம் அணிவது அதிகரித்தால் புதிய ஊரடங்கை தவிர்க்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

முகக்கவசம் அணிவதின் மூலம் ஐரோப்பாவில் புதிய ஊரடங்குகள் தவிர்க்கக்கூடியவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) ஐரோப்பா தலைவர் தெரிவித்தார்.

ஊரடங்குகள் தவிர்க்கக்கூடியவை, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு தான் கடைசி முயற்சியாகும் என்று நான் எனது நிலைப்பாட்டில் நிற்கிறேன்.

முகக்கவசம் பயன்பாடு 95 சதவீதத்தை எட்டினால், ஊரடங்குகள் தேவையில்லை என ஐரோப்பாவிற்கான WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் கூறினார்.

தொடக்கப் பள்ளிகளைத் திறந்து வைக்க வேண்டும், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் கொரோனா வைரஸை பரப்புவதில்லை, பள்ளி மூடல்கள் பயனுள்ளதாக இல்லை என ஹான்ஸ் க்ளூக் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்