பிரேசிலில் பாறை சரிவில் சிக்கி புதைந்து தம்பதி மற்றும் 7 மாத குழந்தை பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Rio Grande do Norte மாநிலத்தில் உள்ள பிபா கடற்கரையிலே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பிபல கடற்கரைக்கு அருகில் உள்ள Praia do Amor பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதிகள் ஸ்டெல்லா சௌசா(33), ஹ்யூகோ பெரேரா (32), அவர்களது ஏழு மாத மகன் சோல் சௌசா மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என நான்கு உயிர்கள் பலியாகியுள்ளது.
சம்பவத்தின் போது தம்பதிகள் பாறைக்கு கீழ் அமர்ந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாறை சரிந்து அவர்களின் மேல் விழுந்துள்ளது.
இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் பாறைக்குள் புதைந்த தம்பதிகளை அவசர அவசரமாக தோண்டி எடுத்துள்ளனர்.
இதில், தாய் ஸ்டெல்லா சௌசாவின் கைகளில் இருந்த குழந்தைக்கு மட்டும் மூச்சி இருந்துள்ளது. சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்ற போராடியுள்ளார், எனினும் குழந்தையும் இதில் பலியாகியுள்ளது.
பாறை சரிய சாத்தியம் உள்ளதாக இச்சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிகாரிகள் தம்பதியை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
#FalaTV - Falésia desaba e mata soterrados pai, mãe, filho de 1 ano e cachorro. Foi na Praia da Pipa em Tibau do Sul no Rio Grande do Norte. pic.twitter.com/rrXSbhw4Cq
— FalaTV.org (@FalaTVoficial) November 17, 2020
எதனால் பாறை சரிந்தது என்பது குறித்து தீயணைப்பு துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.