கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் முக்கிய திருப்பம்: மற்றொரு நாட்டின் ஆய்வு கூறும் புது தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
527Shares

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதாக பல நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டு புற்றுநோய் மருத்துவமனை ஒன்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிலரிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.

மனித உடலில் ஆன்டிபாடிகள் உருவாகுவதற்கு, அதுவும் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் உருவாகுவதற்கு 7 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

அதன்படி பார்த்தால், இத்தாலியில் புற்றுநோய் மருத்துவமனையில் அக்டோபரில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அதற்கும் முன்னரே, அதாவது செப்டம்பரிலேயே அங்கு கொரோனா வைரஸ் இருந்திருக்கவேண்டும் என்று பொருள்.

இந்த தகவல் உண்மையானால், சீனாவின் வுஹான் சந்தையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கேள்விக்குள்ளாகிறது.

இந்த கண்டுபிடிப்பு கொரோனா வைரஸ் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ தெரியாது, ஆனால், சீனாவுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஆம், பார்த்தீர்களா, எல்லாரும் சீனாவையே குறை சொன்னீர்களே, ஆனால், இந்த ஆய்வு வேறு மாதிரி தகவலை கொடுத்துள்ளதே என்று மறைமுகமாக மகிழத் தொடங்கிவிட்டார்கள் சீனர்கள்.

சீன வெளியுறவு அமைச்சர், இந்த ஆய்வு கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது ஒரு குழப்பமான அறிவியல் பூர்வ கேள்வி என்பதையும், அதை அறிவியலாளர்களிடம் விட்டுவிடவேண்டும் என்பதையும் ஒரு முறை கூட நமக்கு காட்டியுள்ளது என்கிறார்.

கொரோனா உருவானதில் பல நாடுகளுக்கு பங்கிருக்கலாம் என்கிறார் அவர். சீனா இந்த ஆய்வின் முடிவுகளை வரவேற்றுள்ள அதே நேரத்தில், பல ஆய்வாளர்கள் உண்மையை நிரூபிக்க மேலும் ஆய்வுகள் அவசியம் என்கிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்