21 பேருக்கு ஈராக்கில் அதிரடியாக மரணதண்டனை நிறைவேற்றிய அரசு... என்ன தவறுக்காக தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
842Shares

ஈராக்கில் தற்கொலைப்பை தாக்குதல், கொலைவழக்குகள் போன்றவைகளில் தொடர்புடைய 21 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டும் ஈராக்கில் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்த துவங்கியது. ஈராக் மட்டுமின்றி சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அப்பாவி பொதுமக்கள் மீதும் அரசு படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய பயங்கரவாதிகள் பலரும் கைது செய்யப்பட்டு ஈராக், சிரியாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை, தூக்கு தண்டனை என குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் 21 பேருக்கு ஈராக் அரசு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதிகள் 21 பேரும் கொலை குற்றங்கள், டல் அப்ரா நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்