13 வயது சிறுமியை எந்த ஒரு குற்ற உணர்ச்சி இல்லாமல் திருமணம் செய்த 48 வயது விவசாயி! கமெராவில் சிக்கிய புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1116Shares

பிலிப்பைன்சில் 13 வயது சிறுமியை 48 வயது ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பிலிப்பைன்சின் Maguindanao-வில் இருக்கும் Mamasapano-வில், கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் திகதி 13 வயது சிறுமி, 48 வயது நபரை திருமணம் செய்யும் படி நிர்பந்திக்கப்படுகிறார்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுமியின் பெயர் குறிப்பிடவில்லை.

ViralPress

சிறுமியை திருமணம் செய்த நபரின் பெயர் Abdulrzak Ampatuan எனவும், இது அவருக்கு ஐந்தாவது திருமணம் எனவும், திருமணம் செய்த சிறுமி வயதில் குழந்தை இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், Abdulrzak Ampatuan சிறுமியின் 20 வயதில் குழந்தை பெற திட்டமிட்டுள்ளார். ஒரு குழந்தையை நாம் திருமணம் செய்கிறோமே என்ற எந்த ஒரு வருத்தமும், அவரிடம் காணப்படவில்லை.

பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில், குறிப்பாக இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட Maguindanao-வில், ஒரு மைனர் பெண் மாதவிடாய் ஆன போதும், குறிப்பிட்ட பருவத்தை அடைந்த பின் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

ViralPress

குழந்தைத் திருமணங்கள் சிறுமிகளின் உடல்நலம், கல்வி மற்றும் வாய்ப்புக்கான உரிமைகளை மீறுவதாக லண்டனைச் சேர்ந்த பிரச்சாரக் குழு பெண்கள் கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்