இன்னும் ஓராண்டு பொறுமையாக இருங்கள்... வேறு வழியில்லை: கொரோனா தடுப்பூசி உருவாக்கியவரின் வேண்டுகோள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1041Shares

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் விடுபட்டு, சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓராண்டு காலம் ஆகலாம் என தெரிவித்துள்ளார் Biontech நிறுவனத் தலைவர்.

சமீபத்தில் அமெரிக்காவின் பைஸர் மருந்து நிறுவனமும் ஜேர்மனியில் இருந்து செயல்படும் துருக்கிய நிறுவனமான Biontech-ம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பில் அதி முக்கிய தகவலை வெளியிட்டனர்.

அதில், தங்களது நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியானது 90 சதவீத பலனளிக்கக் கூடியது என அறிவித்தனர்.

தற்போது இவர்களின் தடுப்பூசிக்கு உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் சர்வதேச செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் Biontech நிறுவனத் தலைவர் Ugur Sahin முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகம் விடுபட்டு சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓராண்டு காலம் ஆகலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது 2021 இறுதியில் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் மெதுவாக விடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

உருவாக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என கூறியுள்ள அவர்,

திட்டமிட்டபடி அனைத்தும் முன்னேறும் எனில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உலகம் முழுவதும் 300 மில்லியன் டோஸ்களை தயாரித்து அளிக்க முடியும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்