ஓடும் ரயிலிலும் தரையில் அமர்ந்திருக்கும் வயதில் மூத்த அமைச்சர்கள்: தாய்லாந்தின் நிலைமையைக் காட்டும் புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
926Shares

ஓடும் ரயிலிலும் மன்னரும் ராணியும் குஷன் இருக்கைகளில் அமர்ந்திருக்க, அவர்கள் முன் வயதில் மூத்த அமைச்சர்கள் தரையில் அமர்ந்திருக்கும் படங்கள் வெளியாகி, தாய்லாந்தின் நிலைமையைக் காட்டுகின்றன.

தாய்லாந்தில், சுரங்க ரயில் நிலையம் ஒன்றைத் திறந்துவைப்பதற்காக மன்னர் Maha Vajiralongkornம் ராணி Suthidaவும் Bangkok வந்திருந்தார்கள்.

ரயிலில் அமர்ந்தபடி அவர்கள் தங்கள் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவண்ணம் ரயிலில் பயணித்தார்கள்.

வெளியாகியுள்ள புகைப்படங்கள் சிலவற்றில், வயதில் மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் சீருடையில் மன்னருக்கும் ராணிக்கும் முன் தரையில் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

மன்னராட்சியில் பழங்காலத்தில் இதெல்லாம் சர்வசாதாரணம் என்றாலும், நாகரீகமும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் இப்படிப்பட்ட காட்சிகள் வெளியாவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஆனால், மன்னரை கடவுளுக்கு சமமாக நினைத்த தாய்லாந்தில், மன்னர் Vajiralongkorn பதவியேற்றபின் மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட்டுள்லதை மறுக்கமுடியாது.

நாட்டில் இல்லாமல் எப்போதும் இளம்பெண்களை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றும் மன்னர் மீது மக்களுக்கு வெறுப்பு வரத்தொடங்கியுள்ளது.

எப்படி அமைச்சர்களும் அதிகாரிகளும் தரையில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவோ, அதே நேரத்தில், நாட்டில் மக்கள் கூடி மன்னருக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளதைக் காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளதிலிருந்து இதை புரிந்துகொள்ளலாம்.

புதிய அரசியல் சாசனம் வேண்டும், மன்னரது உரிமைகள் கட்டுப்படுத்தப்படவேண்டும் என மக்கள் வெளிப்படையாகவே போராடத் தொடங்கிவிட்டதால் இந்த நிலைமை மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்