என் உடல் என் விருப்பம்... நிர்வாண உடலில் எழுதி போராடிய பெண்ணால் பரபரப்பு: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

போலந்து நாட்டின் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிராக என் உடல் என் விருப்பம் என்ற வார்த்தைகளை தனது நிர்வாண உடலில் எழுதிக்கொண்டு உக்ரைன் சமூக ஆர்வலர் ஒருவர் போராட்டத்தில் குதித்த சம்பவம் உலகமெங்கும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தீவிரமான பெண்ணியக் குழுவான ஃபெமன் என்ற இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரே நிர்வாண கோலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் போலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான மொத்த தடைக்கு எதிராக இன்று உக்ரைன் நாட்டின் தலைநகர் கியேவில் உள்ள போலந்து தூதரகத்திற்கு வெளியே நிர்வாண போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

என் உடல் என் விருப்பம் என்ற ஆங்கில வார்த்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்மணியின் நிர்வாண உடலில் எழுதப்பட்டிருந்தன.

சட்டவிரோத கருக்கலைப்புகளைக் குறிக்கும் ஒரு எதிர்ப்பு சின்னமாக அவர் தமது வாயில் கோட் ஹேங்கர்களை வைத்திருந்துள்ளார்.

சகோதரிகளே ஆயுததாரிகளாகுங்கள் என்று பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அந்த பெண் போலந்து மொழியில் முழக்கமிட்டுள்ளார்.

போலந்து நாட்டில் பெண்களுக்கு ஆதரவாக நடந்த மற்றொரு ஆர்ப்பாட்டத்திற்காக தூதரகம் அருகே ஏராளமான ஆர்வலர்கள் கூடினர்.

அப்பெண்களில் ஒருவர், பாதுகாப்பான கருக்கலைப்புகளை தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்தால், பெண்கள் அரசாங்கத்தை கருக்கலைக்க முடிவு செய்யலாம் என்று ஒரு பதாகையை வைத்திருந்தார்.

கடந்த வாரம் போலந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், தவறான வழியிலான கருவுறுதலை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது அரசியலமைப்பிற்கு பொருந்தாது என்று தீர்ப்பளித்தது.

இனிமேல் போலந்தில் பாலியல் வன்கொடுமை அல்லது முறையற்ற உறவு அல்லது தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்