நூடுல்ஸ் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் 9 பேர் பரிதாப மரணம்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
653Shares

சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும்,

அந்த உணவை அக்டோபர் 10 ஆம் திகதி சமைத்து சாப்பிட்டதும் தெரிய வந்துள்ளது. இதில் 7 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என நம்பப்பட்டு வந்த நிலையில், திங்களன்று மரணமடைந்துள்ளார்.

ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாரு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் இதுபோன்ற உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்