ஈவு இரக்கமின்றி தனது 2 குழந்தைகளை பாலத்திலிருந்து வீசிய தாய்! ஆற்றில் துடி துடிக்க இறந்த பிஞ்சுகள்: நெஞ்சை பதற வைக்கும் காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈராக்கில் பெண் ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளை ஆற்றில் வீசிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது.

அக்டோபர் 17ம் தேதி அதிகாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகள் வெளியிட்ட சி.சி.டி.வி காட்சிகளில் அல்-அய்ம்மா பாலத்தின் மீது பெண் டைக்ரிஸ் ஆற்றில் குழந்தைகளை வீசும் காட்சிகளை காட்டியது.

பாதுகாப்புப் படையினர் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்ததாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈராக்கிய பாதுகாப்புப் படையின் சிறப்புக் குழு இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள் 3 வயதான ஹர் முகமது, மற்றும் 1 வயதுடைய மசுமா முகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது, ​​விவாகரத்து கோரும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் குழந்தைகளை கொன்றதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.

பெண் தனது கணவரிடமிருந்து பிரிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆன நிலையில் நீண்ட காலமாக குழந்தைகள் கொல்ல திட்டமிட்டுவந்ததாக குழந்தைகளின் தந்தைவழி தாத்தா அபு தஹ்சின் தேராஜி கூறினார்.

தாய் தனது குழந்தைகளை ஆற்றில் வீசும் வீடியோ வெளியாகி ஈராக் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்