இதுவும் கடந்துபோகும்... இரண்டு உலகப்போர்களை பார்த்த 107 வயது பெண்ணின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
358Shares

தன் வாழ்நாளில் இரண்டு உலகப்போர்களைப் பார்த்த ஒரு 107 வயது பெண் கொரோனாவும் கடந்துபோகும் என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

அயர்லாந்திலேயே அதிக வயதுகொண்டவரான Nancy Stewart, தனது 107ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தனது பிறந்தநாள் செய்தியாக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை எழுதியுள்ளார் Nancy.

கணவரை இழந்த Nancy, தான் உலகில் பல போர்களைக் கண்டதாகவும், பொருளாதார பிரச்சினைகள் மற்றும் நோய்களையும் தன் வாழ்நாளில் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், இதுவும் கடந்துபோகும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதும், மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதும்தான் இப்போதைக்கு அவசியம் என்கிறார்.

என் பெயர் நான்சி, 1913ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதி பிறந்தேன். 1989ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் என் கணவரை இழந்தேன், என் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான மார்கரட்டை 2007இல் அரியவகை நோய் ஒன்றினாலும், சகோதரி இறந்ததால் 2010இல் மனம் வருந்தியே இறந்த ஆன் என்னும் மற்றொரு மகளையும் இழந்தேன்.

நான் இவ்வளவு காலம் வாழ்கிறேன், ஆனால், என் நண்பர்கள் பலர் இந்த உலகத்தை கடந்து போய்விட்டார்கள்.

நம் நாடு, போர்கள், பிரிவுகள் என பல துயரங்களை சந்தித்திருக்கிறது. இப்போது உலகம் இந்த கொரோனா என்னும் பிரச்சினையை சந்தித்து வருகிறது.

ஆனால், நான் உங்களுக்கு நம்பிக்கையை அளிப்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன், நம்பிகை வையுங்கள், எல்லாம் முடிவில் நல்லபடியாகவே நடக்கும்.

நாம் இந்த வைரஸ் தொற்றுக்கெதிரான போராட்டத்தின் இன்னொரு கட்டத்தில் இருக்கிறோம். ஆனால், இதையும் நாம் கடந்துவிடுவோம், நான் பிறந்த 1913இலிருந்து நான் பார்த்ததுபோல, எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எல்லாம் கடந்துபோகும், நான் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறேன்.

ஒரு காலத்தில் நாம் இப்படி ஒரு தொற்றுநோயை சந்தித்தோம் என எதிரகாலத்தில் எண்ணிப்பார்க்கும் ஒரு கடந்த கால சம்பவமாகவே இந்த கொரோனாவும் ஆகிப்போகும்.

எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, அந்த நம்பிக்கைதான் என்னை நான் சந்தித்த போராட்டங்களை கடந்து கொண்டுவந்திருக்கிறது.

என்ன, இப்போதைக்கு நம்மால் நம் நண்பர் ஒருவரை சந்தித்து அளவளாவ முடியாது, ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போக முடியாது, அவ்வளவுதானே என்கிறார் Nancy. நான்சியின் நம்பிக்கையூட்டும் கடிதத்துக்கு நன்றியும், அவரது பிறந்தநாளுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்