கொரோனா பீதியில் பாப்பரசர் பிரான்சிஸ்: பாதுகாப்பு வீரர்கள் நால்வருக்கு பாதிப்பு உறுதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
117Shares

பாப்பரசர் பிரான்சிஸ்கான சுவிஸ் காவலர்கள் நால்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாப்பரசருக்கும் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுவிஸ் காவலர்கள் நால்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

83 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டே வந்துள்ளார். பாதிப்புக்கு உள்ளான காவலர்கள் நால்வரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாப்பரசருக்கான சுவிஸ் காவலர்களில் கொரோனாவுக்கு இலக்காவது கடந்த சில மாதங்களில் இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.

இதனிடையே கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் சுவிஸ் காவலர்களுக்கும் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

மேலும் பெரும்பாலான சுவிஸ் காவலர்கள் திருமணமாகாதவர்கள் என்பதால், அவர்களுக்கு வத்திக்கானின் முக்கிய பகுதியிலேயே தங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி, முக்கிய அதிகாரிகள் மற்றும் திருமணமானவர்களுக்கு வத்திக்கானின் வெளியே தனிப்பட்ட குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இவர்கள் அனைவருமே சுவிஸ் குடிமக்களாவார்கள். தற்போது பாதிப்புக்கு உள்ளான நால்வரும் லேசான அறிகுறிகளுடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியை பொறுத்தமட்டில் இதுவரை கொரோனாவுக்கு 36,166 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மேலும், 355,000 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்