6 பேர் பாதிக்கப்பட்டதால் சுமார் ஒன்பது மில்லியன் மக்களை பரிசோதிக்க தயாரான நாடு!

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
98Shares

சீனாவின் கிங்டாவோவில் சமீபத்தில் புதியதாக 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்ட பின்னர், நகரம் முழுவதும் உள்ள ஒன்பது மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு தென்கிழக்கே கிட்டத்தட்ட 700 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரை நகரமான கிங்டாவோவில் நேற்றைய தினம் 6 பேர் கொரோனா தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நகரம் முழுவதும் நோய்த் தொற்று பரவலை கண்டறியவும் கண்காணிக்கவும் 1,40,000 மருத்துவ ஊழியர்களை கொண்டு சுமார் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஐந்து நாட்களில் கொரோன பரிசோதனையை மேற்கொள்ள சீன சுகாதார ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சீனாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எவ்வித உயர்வும் பதிவாகாமல் இருந்த நிலையில், தற்போது சிறிதளவு உயர்வு பதிவாகியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மூலமாக இந்த உயர்வு பதிவாகியுள்ளதாக கருதப்படுகின்றது.

இதே போல கடந்த ஜூன் மாதம் பெய்ஜிங்கின் பெரிய பகுதிகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே கொரோனா பரிசோதனையை அந்நாடு மேற்கொண்டிருந்தது.

தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் தங்கியிருந்த பகுதிகள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து முதலில் வெளியிடுவதில் சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல நிறுவனங்கள் இறுதி கட்ட சோதனைகளில் உள்ளன.

சீனாவில் தற்போது ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பானது 90,804 ஆக உள்ளது. இதுவரை 4,739 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்