ரயில் பாதையைக் கடக்க முயன்ற பேருந்து... அதிவேகமாக வந்த ரயில்: 18 பேர் பலியான விபத்தைக் காட்டும் வீடியோ

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
139Shares

தாய்லாந்தில் பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதி 18 பேர் பலியான விபத்தைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

பாங்காக்குக்கு 30 மைல் கிழக்கில் உள்ள லெவல் கிராசிங் ஒன்றை ஒரு பேருந்து கடக்க முயன்றபோது, வேகமாக வந்த சரக்கு ரயில் அந்த பேருந்து மீது மோதியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில் அந்த பேருந்து மீது ரயில் மோதியதில் பேருந்து கவிழ, சரிந்து விழுந்த பேருந்தின் கூரையை அந்த ரயில் தொடர்ந்து உரசிக்கொண்டே செல்வதைக் காணலாம்.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 60 பேரில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

40 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எட்டு பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும், 23 பேர் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பின்னர், மதியத்திற்கு மேல் சிறிய அளவில் காயமடைந்திருந்த 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்