ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், தடகள வீராங்கனையும் அரசியல்வாதியுமான அலீனா கபேவா என்ற பெண்ணுக்கும் தொடர்பு என 2008 முதலே வதந்திகள் உலாவந்தன. இதற்கிடையில் அலீனா (37) திடீரென மாயமாகியுள்ளார்.
கடந்த ஆண்டு பிரபல தாய் சேய் மருத்துவமனை ஒன்றின் ஒரு முழு தளமும் காலி செய்யப்பட்டு அலீனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்போது, அலீனா இரட்டைக் குழந்தைகளான இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
அவை புடினுடைய குழந்தைகள் என கூறப்படுகிறது. குழந்தைகளைப் பெற்ற பின் அலீனா மாயமாகிவிட்டார்.
புடினுக்கு, முந்தைய மனைவியான லியுட்மில்லா ஷ்கெர்ப்னேவா மூலம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
மரியா புடினா மற்றும் யேகடெரினா புடினா என்னும் தன்னுடைய மகள்களைப் பற்றி புடின் வெளியே பேசியதேயில்லை.
பொது நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றி பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால் கூட, அவர்களது பெயரைக் கூற மாட்டார் புடின்.
அதாவது, தன் குடும்பத்தை குறித்த எந்த செய்தியும் வெளியே வராமல் பார்த்துக்கொள்வது அவரது வழக்கம்.
அது தனது குடும்பத்தின் பாதுகாப்புக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கை. ஆகவே, இப்போது அலீனா மாயமானதும் கூட அப்படி பாதுகாப்பு கருதித்தான் இருக்கும்என மாஸ்கோ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.