வெளிநாட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் பாகிஸ்தானியரை கோடீஸ்வரனாக மாற்றிய அதிர்ஷ்டம்! என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1196Shares

துபாயில் வசித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த 48 வயது நபர் லொட்டரி மூலம் கோடீஸ்வரனாக மாறியுள்ள நிலையில், அந்த பணத்தை என்ன செய்ய போகிறேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

துபாயில் இருக்கும் சர்வதேச விமானநிலையத்தின் Concourse B-ல் கடந்த புதன் கிழமை நடைபெற்ற Dubai Duty Free Millennium Millionaire and Finest Surprise குலுக்கலில், பாகிஸ்தானை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க Mohammed Shafique என்பவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர்(இலங்கை மதிப்பில் 18,43,47,100 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் திகதி ஆன்லைன் மூலம் வாங்கிய டிக்கெட்டில் இவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. டிக்கெட் எண் 4422, Millennium Millionaire Series எண் 340 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

gulfnews

Mohammed Shafique அபுதாபியில் தன்னுடைய சொந்த மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 30 ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் இவரிடம், இது குறித்து அவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் கேட்ட போது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இது எல்லாம் என்னுடைய குழந்தைகளுக்கு தான் செல்லும், எனது மூத்த குழந்தை, ஒரு மகள் மற்றும் அவரது இளைய உடன்பிறப்பு இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். எனவே இந்த பணத்தில் எனது முன்னுரிமை அவர்களின் கல்விக்காக செலவழிப்பதாக இருக்கும்.

இளையவனுக்கு மூன்று வயது, அவனது பள்ளிப்படிப்பும் ஆரம்பமாகிவிட்டது. எனவே இந்த பணம் இப்போது எனக்கு தேவையான ஒன்று என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை பாகிஸ்தான் வெளிநாட்டவர். இளைஞனாக இருந்தபோது அவரது பெற்றோர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இங்கே வசித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தை தன்னுடைய வீடு என்று கூறும் இவர், இந்த அதிர்ஷ்டம் தன்னுடைய இரண்டாவது முயற்சிலே கிடைத்தது என்று கூறியுள்ளார். அதிர்ஷ்டம் மூலம் கோடீஸ்வரனாக மாறியுள்ள Mohammed Shafique -க்கு ஏழு பிள்ளைகள் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்