கொரோனா தாக்கி மருத்துவமனையில் டிரம்ப்! அனைத்தையும் மறந்து மனிதாபிமானத்தை வெளிப்படுத்திய சீனா

Report Print Basu in ஏனைய நாடுகள்
1956Shares

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரைவாக குணமடைய சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல உலகத் தலைவர்களைப் போலவே, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சனிக்கிழமையன்று டிரம்பையும் அவரது மனைவியையும் விரைவாக குணமடைய வாழ்த்தினார்.

கடந்த வாரம் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் முன்னணியில் வந்த போதிலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவில் உள்ள அதிகாரிகளே காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இப்படி சீனாவை டிரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில், இதை அனைத்தையும் மறந்து ஜி ஜின்பிங் டிரம்ப் மற்றும் அவரது மனைவி விரைவில் குணம் பெற வேண்டும் என்று வாழ்த்தியிருப்பது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், எந்த நாட்டினருடனும் பனிப்போரில் ஈடுபட விருப்பம் இல்லை என்று ஜி ஜின்பிங் சமீபத்தில் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்