ஆப்பிரிக்க நாடு ஒன்றில் உயிரியல் பூங்கா ஒன்றிற்கு வந்திருந்த பார்வையாளர்களை கவர்வதற்காக ஊழியர் ஒருவர் கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை தட்டிக் கொடுத்தபோது நிகழ்ந்த சம்பவம் பார்வையாளர்களை அலறச் செய்தது.
செனகல் நாட்டிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கைடாக இருக்கும் Abdoulaye Wade என்பவர், பார்வையாளர்கள் முன் பந்தா பண்ணுவதற்காக, கூண்டுக்குள் இருக்கும் சிங்கம் ஒன்றைத் தட்டிக்கொடுத்துள்ளார்.
பார்வையாளர்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் பயந்த அந்த சம்பவம் நிகழ்ந்தேவிட்டது.
ஆம், திடீரென அந்த சிங்கம் Wadeஇன் கையைக் கவ்விப் பிடித்துக்கொண்டது. மக்கள் பயத்தில் கூச்சலிட, சிலர் Wadeஐக் காப்பாற்றும் நோக்கில் சிங்கத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோவைப் பார்க்கும்போது, அவ்வளவுதான் Wadeஇன் கையை அந்த சிங்கம் தனியாக எடுத்துவிடும் என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால், Wade அந்த சிங்கத்தின் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்க, அது வாயைத் திறக்க, சட்டென கையை விடுவித்துக்கொள்கிறார் அவர்.
இரத்தம் சொட்ட சொட்ட அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதையும் வீடியோவில் காணலாம்.
வெளியாகியுள்ள மற்றும் சில வீடியோக்களில் Wade அந்த சிங்கத்தை தொந்தரவு செய்வதையும் காணமுடிவதாக கூறப்படுகிறது.
ஆகவேதான் அந்த சிங்கம் அவரைத் தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.