பொய்களை பரப்ப சீனா செலவிடும் தொகை: சமூக ஊடகங்களில் பதிவுக்கு 250 பவுண்டுகள் ஊதியம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
76Shares

கொரோனா பரவலை சீனா சிறப்பாக எதிர்கொண்டது என்ற தகவலை உலகம் எங்கும் பரப்ப சமூக ஊடக பயனாளர்களை அந்த நாடு விலைக்கு வாங்கியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கை ஒன்றில், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ள பொய்யான தகவல்களை பரப்ப திட்டமிட்டு செயல்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவலை தங்கள் நாடு சிறப்பாக எதிர்கொண்டதாகவும், அதனாலையே இறப்பு விகிதம் கட்டுக்குள் இருந்ததாகவும் தகவல்கள் பரப்பப்படுகிறது.

இதற்காக, சீனாவில் சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்தும் பயனாளர்களை கண்டறிந்து அவர்கள் வாயிலாக சீன கம்யூனிஸ்ட் கட்சி வெளியிடும் தகவல்களை பரப்ப முடிவு செய்துள்ளது.

இந்த பயனர்களுக்கு கட்டணமாக 50 முதல் 280 பவுண்டுகளை வழங்குகிறது.

சமீபத்தில் இத்தாலியில் சீனாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்ற பிரச்சாரத்தில் 40 சதவீதம் சீன நிபுணர்களால் கணினியால் உருவாக்கப்பட்ட போலி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள திணறுவது, அவர்களுக்கு போதிய திறமை இல்லை என்பது போன்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

மட்டுமின்றி, அமெரிக்க மக்களை போராட்டத்தில் தூண்டும் வகையில், மீண்டும் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டால் அது மொத்தத்தில் குழப்பமே மிஞ்சும் என்பது போன்றும் பரப்புரை செய்யப்படுகிறது.

மேலும், சீனா சமூக ஊடக நிர்வாகமானது ஆண்டுக்கு 488 மில்லியன் சமூக ஊடக பதிவுகளை பொய்யான தகவல்களுடன் உலக நாடுகளில் வெளியிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்