நாகோர்னோ-கராபாக்கில் துருக்கி அத்துமீறல்! போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி அட்டூழியம்: படங்களை வெளியிட்டு நிரூபித்தது ஆர்மீனிய

Report Print Basu in ஏனைய நாடுகள்

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் துருக்கி போர் விமானத்தால் சுட்டு வீழத்தப்பட்ட தங்கள் நாட்டின் SU-25 போர் விமானத்தின் சிதைந்த பாகங்களின் புகைப்படங்களை ஆர்மீனிய தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிரதேசத்தின் மீது அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியப் படைகளுக்கு இடையிலான சண்டை நான்காவது நாளாக தொடர்கிறது.

செப்டம்பர் 29 அன்று துருக்கிய F-16 போர் விமானம் தங்களுடைய SU-25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, விமானியை கொன்றதாக ஆர்மீனிய குற்றம்சாட்டியது.

மேலும், கொல்லப்பட்டவர் மேஜர் வலேரி டேனலின் என்று ஆர்மீனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் விமானியின் பெயரையும் வெளியிட்டது.

ஆனால், ஆர்மீனிய குற்றச்சாட்டை துருக்கியும் அஜர்பைஜானும் மறுத்துள்ளன.

இந்நிலையில், தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் துருக்கி போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட SU-25 போர் விமானத்தின் பாகங்களின் புகைப்படங்களை ஆர்மீனிய தனது அரசாங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்