தரையிறங்கும்போது நெருப்பு கோளமான விமானம்: உடல் கருகி பலியான பலர்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உக்ரைனின் கார்கோவ் பிராந்தியத்தில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 22 பேர் உடல் கருகி பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் விபத்தில் சிக்கியுள்ளதை இராணுவமும் உறுதி செய்துள்ளது. குறித்த விபத்தில் 22 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலியான நிலையில், இருவர் மிக மோசமான நிலையில் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.

சுகுவேவ் நகருக்கு வெளியே ஒரு விமானநிலையத்தில் தரையிறங்க ஆயத்தமான நிலையில் விமானம் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

ராணுவத்திற்கு சொந்தமான விமானம் என்பதால், அதில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட அதிகாரிகள் தரப்பு மறுத்துள்ளது.

இருப்பினும் 20-கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்திருக்கலாம் என்றே உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

90 சதவீத தீக்காயங்களுடன் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்