2021-ல் கொரோனா தடுப்பூசி! அமெரிக்கா, ஐரோப்பிய உட்பட உலக நாடுகளுக்கு வழங்குவோம்: பிரபல நாடு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி தயாராக இருக்கும் என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது

சீன மருந்து நிறுவனமான சினோவாக் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அமெரிக்கா உட்பட உலகளவில் விநியோகிக்க 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராக இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யின் வீடோங் உறுதியளித்துள்ளார்.

சினோவாக் தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் இறுதி சுற்று சோதனைகளில் வெற்றி பெற்றால், அமெரிக்காவிற்கு தடுப்பூயை விற்க அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிப்போம் என சினோவாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யின் வீடோங் உறுதியளித்தார்.

தனக்கு தனிப்பட்ட முறையில் பரிசோதனை தடுப்பூசி வழங்கப்பட்டதாக யின் கூறினார்.

ஆரம்பத்தில், எங்கள் திட்டம் சீனாவிற்கும் வுஹானுக்காகவும் வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாங்கள் எங்கள் திட்டத்தை சரிசெய்தோம், அதாவது உலகிற்காக வடிவமைத்தோம் என யின் கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடக்கிய உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதே எங்கள் குறிக்கோள் என்று யின் கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான விதிமுறைகளால் வரலாற்று ரீதியாக சீன தடுப்பூசிகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நிலை மாற்றக்கூடும் என யின் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்