எப்போது பார்த்தாலும் அழகிய இளம்பெண்களுடன் வெளிநாடுகளில் தங்கும் மன்னர்: போராட்டத்தில் இறங்கிய மக்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

எப்போது பார்த்தாலும் அழகிய இளம்பெண்களுடன் வெளிநாடுகளிலேயே நேரத்தை செலவிடும் தாய்லாந்து மன்னருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள் மக்கள். தாய்லாந்தின் மன்னர் மஹா வஜ்ரலோங்கார்னை ஒரு பிளேபாய் என்றே கூறலாம்.

பழங்கால மன்னர் கதைகளில் வருவதுபோல, அந்தப்புரம் நிறைய இளம்பெண்கள், பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் சொந்தமாக்கிக் கொள்வது என வாழ்ந்து வருபவர் அவர். உலக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத நிகழ்வாக சட்டப்பூர்வமாக மனைவிக்கு போட்டியாக இளம்பெண் ஒருவரை மக்கள் முன்னிலையில் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டவர்.

அத்துடன் நாடே கொரோனாவில் தத்தளிக்கும் நிலையில், ஜேர்மனியில் ஒரு ஆடம்பர ஹொட்டலில் தன்னை மகிழ்விப்பதற்காகவே அமைக்கப்பட்ட ஒரு பெண்கள் படையுடன் தங்கியிருந்தார் அவர்.

எப்போதும் வெளிநாட்டிலேயே வாழும் மன்னர் நமக்குத் தேவையா என மக்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் வேளையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்றிருந்தார் வஜ்ரலோங்கார்ன்.

இதற்கிடையில் மன்னருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் மக்கள். அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவது முதல் மன்னருடைய அதிகாரங்களை குறைப்பது வரை பல்வேறு காரணங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெண்களின் மேலாடை போல் ஒன்றை அணிந்து வெளிநாடு ஒன்றில் உலாவந்த மன்னரை கேலி செய்யும் வண்ணம் அதேபோன்ற உடைகளை அணிந்து ஆண்கள் போராட்டங்களில் பங்கேற்றனர்.

ஆனால், தாய்லாந்தைப் பொருத்தவரை மன்னரை விமர்சிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்னும் பயங்கர சட்டம் இருப்பதால், இதுவரை அவர் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்