பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய நிறுவனம்! எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிரேசிலில் பணிபுரியும் தனது முன்னாள் ஊழியர்களுக்கு நிவாரண நிதியாக 48 கோடி ரூபாயினை வோல்க்ஸ்வேகன் வழங்கியுள்ளது.

பிரேசிலில் 1964 முதல் 1985 வரையிலான கால கட்டத்தில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. அப்போது தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களில் உளவாளிகளாக இருப்போரை ராணுவத்திற்கு இந்நிறுவனம் அடையாளம் காட்டியது. இதன் காரணமாக பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவிடம் தற்போது இந்த நிறுவனம் 48கோடியே 13லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த தொகை ராணுவ ஆட்சியின் போது அந்த நிறுவனத்தில் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்