ஆற்றிலிருந்து உருவான திடீர் அலை: நிமிடத்தில் கார்களை அடித்துச் செல்லும் காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சீனாவில் ஆறு ஒன்றிலிருந்து திடீரென உருவான அலை ஒன்று வரிசையாக பல கார்களை தூக்கிச்செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவின் Hangzhou நகரில் Qiantang நதியோரமாக உள்ள சாலையில் வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருக்க, திடீரென ஆற்றிலிருந்து ஒரு ராட்சத அலை உருவாகியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், நடக்க இருப்பதை அறியாமல் கார்கள் பயணித்துக்கொண்டிருக்க, திடீரென ராட்சத அலை ஒன்று சாலையை நோக்கி வருவதைக் காணமுடிகிறது.

அந்த அலையில் சில விநாடிகளுக்குள் பல கார்கள் அடித்துச் செல்லப்படுகின்றன. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லையாம். சில பெரிய நதிகளில் திடீரென இதுபோல tidal bore என்னும் ஒரு நிகழ்வு ஏற்படுவதுண்டாம்.

அப்படி ஏற்படும்போது, இதுபோல் ராட்சத அலை ஒன்று தண்ணீரை வெளித்தள்ளுவதுண்டாம். பிரித்தானியாவின் நீளமான நதியான Severn நதியில் கூட இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதுண்டாம், என்றாலும் இந்த சீன நதியில் ஏற்பட்ட அலை உண்மையாகவே மிகப்பெரியது என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்