சவப்பெட்டியில் ஏறி ஆட்டம் போட்ட இளம் பெண்! கூடி நின்று பார்த்த மக்கள்: 10 மில்லியன் பேர் பார்த்த வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈக்குவடாரில் சவப்பெட்டியின் மீது ஏறி பெண் ஒருவர் ஆட்டம் போடும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது

ஈக்குவவடாரின் Manabí மாகாணத்தின் Manta-வில் வசித்து வந்த Marlon Mero Quijije என்ற 35 வயது வணிகர் சமீபத்தில் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

அவரது இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டியில் மீது ஏறி பெண் ஒருவர் வெறித்தனமான ஆட்டம் போடுவதை பார்க்க முடிகிறது. இதை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

தற்போது அந்த வீடியோ 10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. சவப்பெட்டியின் மீது ஏறி ஆட்டம் போட்ட அந்த பெண் யார்? உண்மையில் இது இறுதி ஊர்வலத்தின் போது நடந்த சம்பவமா? என்பது குறித்து எந்த ஒரு முழுத் தகவல்கள் வெளியாகவில்லை.

இருப்பினும் சவப்பெட்டியின் மீது உட்கார்ந்து அந்த பெண் ஆட்டம் போடும் காட்சி வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்