இந்த நாடுகளுக்கு சென்றால் கைது செய்யப்படலாம்... குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியாவும் அமெரிக்காவும்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரித்தானியாவும் அமெரிக்காவும், தங்கள் நாட்டுக் குடிமக்களை சீனாவுக்கும் ஹொங்ஹொங்குக்கும் செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளன.

ஹொங்ஹொங்கில், மைய சீன அரசு பொலிசாருக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை காரணமேயின்றி தன்னிச்சையாக பயன்படுத்தும் ஒரு சூழல் நிலவுவதால், அங்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டுக் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

முன்பு ஹொங்ஹொங்குக்கு செல்லும்போது கவனமாக இருக்குமாறு மட்டும் அமெரிக்கா தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.

ஆனால், இப்போது, ஹொங்ஹொங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறியதால் தற்போது ஹொங்ஹொங்குக்கு பயணிப்பதையே மறுபரிசீலனை செய்யும் மன நிலைமை அமெரிக்காவுக்கு வந்துவிட்டது.

அதேபோல், பிரித்தானியாவும், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி வெளிநாட்டவர்களை சீன அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவங்களை மேற்கோள் காட்டியுள்ளது.

காரணமேயின்றி பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்களை சீனா கைது செய்து காவலில் அடைக்கும் அபாயம் இருப்பதாக அது எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு பிரித்தானியா இப்படி கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்ததில்லை.

அதேபோல், அமெரிக்கர்கள் சீனாவுக்கு செல்லும்போது, அவர்களை பிடித்துவைத்துக்கொண்டு, அவர்களது குடும்பத்தினரை மிரட்டி வரவழைப்பது முதல் பல அரசியல் ரீதியான பிரச்சினைகள் உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால், சீனாவுக்கு செல்வது குறித்து யோசித்து முடிவெடுக்குமாறு தன் குடிமக்களை அமெரிக்காவும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்