சிரியாவில் அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து பயங்கர விபத்து

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சிரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானதாக SANA செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிரியாவின் வடகிழக்கு மாகாணமான அல்-ஹசாகாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தை அமெரிக்க வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அல்-யாருபியாவுக்கு அருகிலுள்ள டெல் ஹடாத் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டரின் வகை மற்றும் விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

2014 முதல், அமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக ஐ.நா ஆணை அல்லது சிரியாவின் அங்கீகாரமின்றி நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.

மத்திய கிழக்கு நாட்டில் அமெரிக்காவின் இராணுவ இருப்பு சட்டவிரோதமானது என்று சிரிய அரசாங்கம் பலமுறை கண்டித்துள்ளது.

எனினும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பில் அமெரிக்க இராணுவம் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்