அந்தரத்தில் கோளாறாகி தரையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் அட்டாக் மாவட்டத்தில் பிண்டிகேப் பகுதியிலே விமானம் விழுந்து சிதறியுள்ளது.

பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

விபத்துக்கு முன்னர் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், விபத்து நடந்த இடத்தில் உயிர் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கை கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானது JF-17 ரக விமானம் என கூறப்படுகிறது. விபத்தை அடுத்த மீட்டு குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்