உச்சம் தொட்ட பாதிப்பு: கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,07,930 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான நோய் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 5,537 போ் பலியாகியுள்ளனா், இதுவே உலகில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னா், இந்த மாதம் 6-ஆம் தேதிதான் உலக அளவில் அதிகபட்ச தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. அந்த நாளில் மட்டும் 3,06,857 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

திங்கள்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 2.9 கோடிக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சா்வதேச கொரோனா நிலவரத்தைக் கண்காணித்து வரும் ‘வோ்ல்டோமீட்டா்’ இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 9.29 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்