சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த பெண்ணின் மோசமான செயல்! சிசிடிவியில் பதிவான காட்சி: கொடுத்த தண்டனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருட்டு செயலில் ஈடுபட்ட மூதாட்டியை, கையும், களவுமாக பிடித்து அவர் கழுத்தில் நான் ஒரு திருடன் என்று எழுதி, அந்த அட்டையுடன் குறித்த மார்க்கெட்டிற்கு வெளியே உட்கார வைத்த சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் Guangdong மாகாணத்தின், Foshan-னில் உள்ள ப்ரு சூப்பர் மார்க்கெட்டிற்கு கடந்த வெள்ளிக் கிழமை மாலை நேரத்தில் சென்ற மூதாட்டி ஒருவர், கடைக்கு மளிகை சாமான்கள் வாங்க வந்துள்ளார்.

அப்போது அதற்காக பணம் செலுத்தும் இடத்திற்கு வந்த போது, அந்த மளிகை ஜாமான்களுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த பன்றி இறைச்சியை ரகசியமாக எடுத்து பையினுள் போட்டார்.

இதைக் கண்ட ஊழியர் ஒருவர் அவரை கையும், களவுமாக பிடித்து, பையை சோதனை செய்த போது வசமாக சிக்கினார்.

இதையடுத்து பொலிசாருக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது பொலிசார் அந்த பாட்டிக்கு அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த பாட்டியின் குடும்பத்தினர் அபராதம் கட்ட மறுத்த நிலையில், பொதுமக்களை எச்சரிக்கும் விதமாகவும், அவரை தண்டிக்கும் விதமாகவும், குறித்த பாட்டியின் கழுத்தின் நான் ஒரு திருடன் என்று எழுதிய வாசகத்துடன் சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே உட்கார வைத்துள்ளனர்.

இதற்கு பாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒப்புக் கொண்ட நிலையில், சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் இப்படி செய்துள்ளது. சுமார் 10 நிமிடங்கள் இப்படி உட்கார வைத்து, அதன் பின் அவர் அனுப்பப்பட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.

பாட்டி இறைச்சியை திருடும் காட்சியும், அதன் பின் அவர் மார்க்கெட்டிற்கு வெளியே திருடன் என்ற வாசகத்துடன் உட்காருக்கும் காட்சியும் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்