கொரோனா கடவுளின் தண்டனை என்று கூறிய பாதிரியார் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளிவரும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

உக்ரைனில் தன்பாலின திருமணங்களால் ஆத்திரமடைந்த கடவுள்தான் கொரோனாவை தண்டனையாக அனுப்பியுள்ளதாக கூறிய பாதிரியாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவர் பாதிரியார் பிலரெட்(91), தன்பாலின திருமணங்களால் ஆத்திரமடைந்ததால், கடவுள் கொடுத்த தண்டனைதான் கொரோனா வைரஸ் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, தற்போது இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிலரெட்டின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக உக்ரைன் ஆர்தடாக்ஸ் தேவாலயத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்க்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பூரண குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமென தேவாலயம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் கடவுளின் தண்டனை, மனிதர்களின் பாவங்களுக்கு கடவுளின் தண்டனைதான் இது. அதில் முதல் பாவம் தன்பாலின திருமணங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து உலகளவில் தன்பாலின உரிமை செயற்பாட்டாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிலரெட்டின் கருத்தை ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனமும் கடுமையாக சாடிய நிலையில், பிலரெட்டுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்