இந்த நாட்டு மக்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெறனும்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்திய பயணிகள் அனைவரும் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளித்த பிறகே சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் பரவலை தடுப்பதற்காக ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், எங்கள் நாட்டுக் குடிமக்கள் அல்லாத இந்தியப் பயணிகள் அனைவரும் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் அளித்த பிறகே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வரும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாதவர்கள் கடந்த 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கண்டிப்பாக வெளிநாட்டினர் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அவர்கள் நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை இருக்கிறது.

அதன் படி, கொரோனா வைரஸ் பரிசோதனையை முறையாகச் செய்யாத இந்தியர்கள் உள்பட 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்