மொபைல் பார்த்துக்கொண்டே கழிப்பறையில் உட்கார்ந்திருந்த நபர்: சுருக்கென வலித்தபோது கண்ட திகில் காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கழிப்பறையில் மொபைலைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் இடத்தில் சுறுக்கென வலிக்க, பதறிப்போய் எழுந்திருக்கிறார்.

தாய்லாந்தில் வாழும் Siraphop Masukarat (18) வலி தாங்காமல் குனிந்து பார்க்க, மலைப்பாம்பு ஒன்று அவரது உறுப்பைக் கவ்விகொண்டிருந்திருக்கிறது.

அய்யோ அம்மா என அவர் போட்ட சத்தத்தில் அவரது தாயர் ஓடி வர, கழிவறை முழுவதும் ஒரே இரத்தமாக இருந்திருக்கின்றது.

உடனே மகனை ஆசுவாசப்படுத்திவிட்டு, மருத்துவ உதவிக்குழுவை அழைத்திருக்கிறார் Masukaratஇன் தாய்.

அவர்கள் வந்து Masukaratக்கு முதலுதவி அளித்த பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இதற்கிடையில் Masukaratஇன் தாய் பாம்பு பிடிப்பவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் வந்து பாம்பைத் தேட, அது கழிப்பறைக் கோப்பைக்குள்ளேயேதான் இருந்திருக்கிறது.

அதை பிடித்தவர்கள், அது ஒரு விஷமற்ற மலைப்பாம்பு என்று கூறியிருக்கிறார்கள். அதனால்தான் Masukarat சிறு காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறார்!

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்