கடந்த மாதம் வெடித்து சிதறிய பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து! வானுயரத்திற்கு பரவிய புகை: தெறித்து ஓடிய மக்கள்

Report Print Basu in ஏனைய நாடுகள்

லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் இதே பெய்ரூட் துறைமுகத்தில் பயங்கர வெடி வியத்து ஏற்பட்டு துறைமுக வசதிகளையும் சுற்றியுள்ள பகுதிகளையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4 அன்று வெடித்ததில் சுமார் 191 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாவில்லை, பெரிய கருப்பு புகை வானுயரத்திற்கு எழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்கள் விரைந்தள்ளன, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீ விபத்தை தொடர்ந்து மக்கள் அப்பகுதியிலிருந்து தப்பி ஓடும் காட்சி வீடியோவாக வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்