வீட்டுக்குள் அரை நிர்வாணமாக பிளாஸ்டிக் பையில் கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமியின் சடலம்! வெளிவரும் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் 14 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில் பிளாஸ்டிக் பை உள்ளே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ludmila Pretti என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அங்குள்ள ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் Ludmila, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

பின்னர் கொலை செய்யப்பட்ட Ludmilaவின் உடல் பிளாஸ்டிக் பையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

அதாவது Ludmila கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் இந்த விருந்து நிகழ்ச்சியை நடத்திய Cristian Jerez (19) என்ற இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ள நிலையில் அதன்பின்னரே இந்த சம்பவத்தில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்