கொரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

போலந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்.

போலந்தை சேர்ந்த கிரெகோர்ஸ் லிபின்ஸ்கி என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து டைஷி நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது இரண்டு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த தெரியவந்தது.

இதனையடுத்து நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்த நிலையில், உறுப்பு தானம் செய்த ஒருவரிடமிருந்து இரு நுரையீரல்கள் பெறப்பட்டன.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் நடந்தது, தற்போது முற்றிலுமாக குணமடைந்த கிரெகோர்ஸ் வீடு திரும்பியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்