துணை ஜனாதிபதியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்! பற்றி எரிந்த பகுதி: பலி எண்ணிக்கை உயர்வு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானில் துணை ஜனாதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கர வெடி குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே தனது அலுவலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது, அவரது வாகனத்தை குறிவைத்து பயங்கர வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக தீ காயங்களுடன் அம்ருல்லா சலே உயிர் தப்பியுள்ளார். இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.

வெடி குண்டு தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலுள்ள சாலைகள் மூடப்பட்டன.

ஏரிவாயு சிலிண்டர்கள் விற்கப்படும் பகுதியில் இத்தாக்குதல் நடந்தால் அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் கீழ் நகர்ப்புறங்களில் தாக்குதல்களை நடத்த மாட்டோம் என்று உறுதியளித்த தலிபான்கள், இத்தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது வரை இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்