அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

2021-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நார்வேயைச் சேர்ந்த கிறிஸ்டியன் டிப்ரிங் என்பவர் நோபல் குழுவிற்கு இந்த பரிந்துரையை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமீரகத்தும் இடையே அமைதிக்கான ஓப்பந்தத்தை சாத்தியப்படுத்தியதற்காக இந்த ப்ரிந்துரையை மேற்கொண்டதாக கிறிஸ்டியன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ட்ரம்ப் நடவடிகைகள் மத்திய கிழக்கில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. '

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னை, வட கொரியா - தென் கொரியா இடையேயான அமைதி ஒப்பந்தம் என ட்ரம்ப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளில் போரில் ஈடுபடாத ஒரே அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உள்ளார். அமைதிக்காக வேறு எவரை விடவும் ட்ரம்ப் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்றுள்ளார்.

நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பரிசீலிக்கப்பட்டு அக்டோபரில் அறிவிக்கப்படும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்