ஈராக் மற்றும் சிரியாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்ற அதிரவைக்கும் தகவலை ஐ.நா. வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறும்போது, ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுப் படைகள் காரணமாக ஐஎஸ் படைகள் பெருமளவு தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.