51 பேரின் உயிரை பறித்த தீவிரவாதிக்கு ஆயுள்தண்டனை: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
148Shares

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் புகுந்து தாக்குதல் நடத்திய நபருக்கு பரோல் இல்லாத ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள அல் நூர் மற்றும் லிண்ட்வுட் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது பிரென்ட்டன் என்ற நபர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 51 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பேஸ்புக் லைவில் இந்த தாக்குதல் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.

இக்கொடூர சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளியான பிரென்ட்டன் மீது 51 கொலை மற்றும் 40 கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில் தீவிரவாத செயலுக்கான குற்றச்சாட்டை மட்டும் பிரென்ட்டன் ஒப்புக்கொண்டதால் ஆயுள் தண்டனை நீதிபதிகள் உத்தரவிட்டனர், பரோல் கிடையாது எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்