திருமணத்துக்கு தயாரான இளம்பெண்ணின் செல்போனுக்கு வந்த புகைப்படங்கள்! அதை பார்த்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
803Shares

கென்யாவில் திருமணம் செய்து கொள்ள தயாரான பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்ற இளைஞன் கைது செய்யப்பட்டார்.

James Muchunu Maina என்ற இளைஞனும் இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ல் பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் வேறு நபருடன் காதலில் விழுந்த அப்பெண் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.

இந்த சமயத்தில் அப்பெண்ணின் முன்னாள் காதலனான James, அவரின் நிர்வாண புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளார்.

மேலும் கோடிக்கணக்கில் பணம் தனக்கு தர வேண்டும் எனவும், அப்படி தரவில்லையென்றால் புகைப்படங்களை வருங்கால கணவருக்கு அனுப்பிவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார்.

தன்னிடம் புகைப்படம் உள்ளது என்பதை காட்ட முன்னாள் காதலிக்கு அவர் தூங்கும் போது நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை செல்போனில் அனுப்பியிருக்கிறார்.

இதை பார்த்து அப்பெண் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். இது குறித்து அவர் பொலிசில் புகார் கொடுத்தார்.

புகாரை தொடர்ந்து பொலிசார் James-ஐ கைது செய்தார்கள். நீதிமன்ற விசாரணை நடந்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அக்டோபர் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்