தாய்க்கு வயது 14... தந்தைக்கு வயது 11: அபூர்வ தம்பதியின் குடும்ப புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1280Shares

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமியின் அபூர்வ குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

தன் காதலனான Ivan (10)இன் குழந்தையை தான் கருவில் சுமப்பதாக ரஷ்ய தொலைக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்தினார் Darya Sudnishnikova (13) என்ற சிறுமி.

ஆனால் Ivanனே ஒரு குழந்தை, அவனால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட, தன்னை ஒரு இளைஞன் வன்கொடுமை செய்துவிட்டான், இது அவனுடைய குழந்தைதான் என்று உண்மையை போட்டு உடைத்தாள் Darya. Darya, 400,000 பேர் பின்தொடரும் ஒரு சமூக ஊடக பிரபலம் ஆவார்.

தற்போது அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ள Darya, தன்னை பின்தொடர்பவர்களுக்காக தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தாய்க்கு வயது 14, தந்தைக்கு வயது 11 என அந்த அபூர்வ தம்பதியின் குடும்ப புகைப்படம் பார்க்கவே வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

Daryaவுக்கு 14 வயதே ஆவதால், அவளது குழந்தைக்கு அவளது தாயாகிய Elena Sudnishnikova (35), பாதுகாவலராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

ரஷ்ய பாரம்பரியப்படி, 40 நாட்கள் வரை குழந்தையின் முகத்தை வெளியே காட்டக்கூடாது என்பதால் குழந்தையின் புகைப்படத்தைக் காட்டவில்லை என்று கூறும் Darya, தன் காதலன் Ivanக்கு 16 வயதாகும்போது, அவர் தன் குழந்தைக்கு முறைப்படி தந்தையாக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

அதுவும், அப்போது எங்கள் இருவருக்குள்ளும் உறவு எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்துதான் என்கிறாள் இந்த அபூர்வத் தாய்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்