கொரோனாவால் இறந்த உடல்கள் குவியல் குவியலாக குவிப்பு... ஊரடங்கும் இல்லை: ஆனால் கொரோனா ஏகமாக குறைந்து வரும் நகரத்தின் ரகசியம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசில் நகரமொன்றில் கொரோனாவால் இறந்த உடல்கள் குவியல் குவியலாக குளிர் பதன ட்ரக்குகளில் குவித்து வைக்கப்பட்டன...

அப்படிப்பட்ட நிலையிலும் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை... ஆனாலும் கொரோனா தொற்று பரவல் வேகமாக குறைந்துவருகிறது! அந்த நகரம், பிரேசிலின் Manaus நகரம்.

மழைக்காடு ஒன்றின் நடுவில் அமைந்துள்ள Manaus நகரம், உலகில் கொரோனா பரவத்துவங்கிய காலகட்டத்தில் பயங்கரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டது.

நான்கு மாதங்களுக்கு முன் கொரோனாவால் இறந்தவர்களைப் புதைப்பதற்கு புல்டோசர்கள் உதவியுடன் ராட்சத கல்லறைகள் தோண்டிய செய்தி வெளியானதால் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது Manaus.

கொரோனாவால் இறந்த நூற்றுக்கணக்கானோரின் உடல்கள் குவியல் குவியலாக குளிர் பதன ட்ரக்குகளில் குவித்து வைக்கப்பட்ட காட்சி, ஹாரர் திரைப்படங்களில் வரும் காட்சி போல் இருந்ததாக நகர மேயரே தெரிவித்திருந்தார்.

ஆனால், மற்ற நாடுகள் பலவற்றைப்போல, அங்கு ஊரடங்கு அறிவிக்கப்படவோ, மாஸ்க் அணிதலும், சமூக விலகலும் கட்டாயம் என்றும் அறிவிக்கப்படவோ இல்லை! ஆனாலும், கொரோனா தளர்த்தப்பட்டபின் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நாடுகளைப்போல, (பிரித்தானியா உட்பட), Manaus நகரில் கொரோனா தொற்று அதிகரிக்கவில்லை.

இதற்கு காரணம், Manaus நகரம், herd immunity என்ற வகை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றதனால் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பின் துணை இயக்குநரான Jarbas Barbosa da Silva கூறும்போது, Manaus நகரில் கொரோனா தொற்று மிக பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் மொத்தமாக மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

ஆனால் அதற்கு Manaus நகரம் செலுத்திய விலை மிகப்பெரியது என்று கூறுகிறார் அவர். Manaus நகரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,300. ஆனால், நகரின் மொத்த மக்கள் தொகையே 1.8 மில்லியன் தான்.

அதாவது அங்கு 500இல் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார் என்பது அதன் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்