விமான விபத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை! தாயிடம் உண்மையை சொல்லமால் மறைத்து வரும் தந்தை: சொன்ன கண்ணீர் காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
5031Shares

கேரள விமான விபத்தில் 2 வயது மகள் உயிரிழந்துள்ள நிலையில், மனைவியிடம் இது குறித்து தெரிவிக்காமல் தவித்து வருகிறார் கணவன்.

நேற்று துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதால், இந்த விபத்தில் 18 முதல் 19 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், இந்த விமான விபத்தில் Murtaza Faisal(31) என்பவர் தன்னுடைய இரண்டு வயது மகளை பறிகொடுத்துள்ளார்.

துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக இருக்கும் இவருக்கு Sumayya Thasneem(27) என்ற மனைவியும், இரண்டு வயதில் Aysha Dua என்ற மகளும் இருந்தனர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் திகதி சுற்றுலா விசா மூலம் Sumayya Thasneem மற்றும் அவரது மகள் Aysha Dua துபாய் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் இந்த கொரோனா பிரச்சனை வந்துவிட, Sumayya Thasneem மற்றும் Murtaza Faisal ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்துள்ளனர்.

gulfnews

இதையடுத்து இந்திய அரசின் வந்தே பாரத் மிஷின் திட்டத்தின் படி 7-ஆம் திகதி குறித்த விமானத்தில் மகள் மற்றும் மனைவிக்கு புக் செய்த அவர், அதன் பின் அடுத்த மூன்று மணி நேரத்தில் வரும் விமானத்தில் அவருக்கு பதிவு செய்து கொண்டார்.

ஆனால், அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. இதில் Sumayya Thasneem பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் வந்த மகள் Aysha Dua உயிரிழந்துவிட்டார்.

இருப்பினும் மகள் உயிரிழந்தது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் பூரண குணம் பெற்று திரும்ப வேண்டும் அதன் பின் சொல்லிக் கொள்ளலாம் என்று Murtaza Faisal முடிவு செய்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்